துடியலூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் பங்கேற்பு!

கோவை துடியலூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



கோவை: துடியலூரில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை துடியலூர் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். வட்டக் கழக செயலாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்வில் வெ.நா.பழனியப்பன் அருள்மொழி, சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள், கற்பகம், புஷ்பமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,



தமிழ்நாட்டில் விவசாயிகளின் தேவையை அறிந்து இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் இலவச மின் இணைப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர் மாணவியர் கல்வியை மேம்படுத்த காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம். பெண்களுக்கு இலவச பஸ் சேவை வசதி போன்று பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



மாநில அரசின் நிதி வசதிக்கு ஏற்ப கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்க அரசு கவனத்துடன் ஆய்வு செய்து வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும்.

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாத நிலையில் சுமார் 300 கோடி மேல் பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே திமுக அரசை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.



இந்த விழாவில் 10ஆம் வகுப்பு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 57 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பரிசு வழங்கப்பட்டன.



தொடர்ந்து 50 பெண்களுக்கு தையல் மெஷின், மற்றும் காது கேட்கும் கருவி வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தொ. ஆ. ரவி ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், கிருஷ்ண குமார், மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் டி.பி சுப்பிரமணியன் சண்முக சுந்தரம். பகுதிகழக பொருளாளர் ராக்கிமுத்து, மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...