கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வருகிற 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் எனவும் இந்த தேதி கட்டாயம் நீட்டிக்கப்படாது எனவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார், முதன்மை ஆணையர் திருமலைக்குமார், துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கிருஷ்ணகுமார், மத்திய அரசு பண மதிப்பிழப்பு அறிவிப்பின் ஒரு கட்டமாக கருப்பு பணத்தை கணக்கில் காட்ட பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் வருகிற மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் கருப்பு பணம் குறித்த தங்கள் தகவல்களை வருமான வரித்துறையில் அளித்து அபராதம் மட்டும் செலுத்தி சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் இருந்து விளக்கு பெறலாம் எனக்கூறிய அவர் இந்த திட்டம் கட்டாயமாக மார்ச் 31க்கு பிறகு நீட்டிக்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடந்த 2 வாரங்களில் கோவை மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட ஆய்வுகளை செய்துள்ளதாகவும் இதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். கருப்பு பணம் தொடர்பான தகவல்களை அளிக்க சலான் 287ஐ மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.