ஏழை மாணவர்கள் மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய விளையாட்டு வீரர்களுக்கு உதவும் விதமாக எஜூ-தர்மா செயலி இன்று கோவை ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.

படிப்பு செலவு மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் திறமை மிகுந்த மாணவர்களுக்கு பணபற்றாக் குறையை தீர்க்கும் விதமாக இந்த செயலி கட்டமைக்கப்பட்டுள்ளது. எஜூ-தர்மா செயலியின் மூலம் பணம் தேவைப்படும் நபர் தங்கள் விவரங்களை தெரிவிப்பர். பின்னர், நன்கொடையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கின் மூலமாக அவர்களுக்கு நிதி உதவி அளிப்பர்.
இந்த செயலியை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். தலைவர் கேசவசாமி, சைபர் லேப்ஸ்-ன் நிறுவனர் தாம்சன் மார்ட்டின் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.