சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் - ஈஷா கிராமோத்சவம் குறித்து வீடியோ மூலம்‌ சத்குரு அறிவுரை!

நம்‌ வாழ்க்கையில்‌ சுறுசுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும் என கிராமாத்சவம் விளையாட்டு வீரர்களுக்கு சத்குரு கூறியுள்ளார்‌.


கோவை: சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் என ஈஷா கிராமோத்சவம் குறித்த வீடியோவில்‌ சத்குரு அறிவுறுத்தியுள்ளார்.



இந்தியாவின்‌ மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழாவான 15வது ஈஷா கிராமோத்சவம்‌ இன்று தொடங்குகிறது.



இது தொடர்பாக சத்குரு அவர்கள்‌ வெளியிட்டுள்ள விடியோவில்‌, நம்‌ பாரத கலாச்சாரத்தில்‌ வாழ்க்கையையே ஒரு விழாவை போல்‌ கொண்டாட்டமாக வைத்து இருந்தோம்‌.

நம்‌ தேசத்தில்‌ 365 நாட்களும்‌ ஏதோ ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும்‌. விழா என்றால்‌ வேலை செய்ய கூடாது. விடுமுறை எடுக்க வேண்டும்‌, அதிகமாக சாப்பிட வேண்டும்‌ என்பது அல்ல. எப்போது நீங்கள்‌ எல்லா செயல்களையும்‌ கொண்டாட்டமாக செய்கிறீர்களோ அதுவே ஒரு விழா தான்‌.

நம்‌ கிராமங்களில்‌ உழவு செய்யும்‌ போது, நெசவு நெய்யும்‌ போது, சமையல்‌ செய்யும்‌ போது, குழந்தையுடன்‌ விளையாடும்‌ போது என எந்த செயல்‌ செய்தாலும்‌ அதில்‌ ஒரு பாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இருக்கும்‌.

எப்போது நம்‌ வாழ்வில்‌ இந்த கொண்டாட்ட தன்மையை இழக்கிறோமோ அப்போது மன அழுத்தம்‌ வரும்‌. நம்‌ வாழ்க்கையில்‌ சுறு சுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும்‌.

உங்களுடைய பாட்டி சீரியஸ்‌ ஆக இருக்கிறார்‌ என்றால்‌ என்ன அர்த்தம்‌? அவர்‌ போவதற்கு தயாராகிவிட்டார்‌ என்று தானே அர்த்தம்‌. நீங்கள்‌ அப்படி ஆக கூடாது. எப்போதும்‌ சுறு சுறுப்பாகவும்‌ புத்துணர்வாகவும்‌ இருக்க வேண்டும்‌.

உங்களுக்குள்‌ விளையாட்டு தன்மையை கொண்டு வர எங்கோ சென்று போட்டி போட வேண்டும்‌ என்று அவசியம்‌ இல்லை. உங்கள்‌ விட்டிலேயே குடும்பத்தினருடன்‌ விளையாடி கொள்ளலாம்‌.

கிராமங்களில்‌ கூட இப்போது வெறும்‌ பணத்தை மட்டும்‌ கணக்கு போட்டு கொண்டு இருப்பதால்‌ மன அழுத்தம்‌ அதிகமாகிவிட்டது. சமூகங்களில்‌ ஜாதி, மதம்‌ என பல விதமான பாகுபாடுகள்‌ வந்துவிட்டது.

இதற்காக தான்‌ ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா. 2004-ம்‌ ஆண்டு இதை முதல்‌ முறையாக தொடங்கினோம்‌. இப்போது 15 வது ஈஷா கிராமோத்சவம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்கி செப்‌.23-ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது. இகில்‌ 60,000-க்கும்‌ மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்‌ ஈடுபடுகிறார்கள்‌.

இவர்கள்‌ எல்லாம்‌ நன்கு தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள்‌ கிடையாது. வீட்டில்‌ சமையல்‌ செய்யும்‌ பாட்டியும்‌ அவருடைய பேரன்‌ பேத்திகளும்‌ ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக இதில்‌ விளையாடுகிறார்கள்‌.

இதுபோன்ற ஒரு மிகப்பெரிய கிராமிய விளையாட்டு போட்டி உலகத்தில்‌ வேறு எங்கும்‌ இல்லை என கூறலாம்‌. அந்தளவிற்கு மிகப்‌ பெரிய அளவில்‌ மிக உற்சாகமாக நடக்க உள்ளது. எனவே, இந்த ஈஷா கிராமோத்சவத்தில்‌ அனைவரும்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.

இப்போது நம்‌ பாரத தேசம்‌ பொருளாதாரத்தில்‌ முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில்‌ நம்‌ வாழ்வில்‌ விளையாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இல்லாமல்‌ போய்விட்டால்‌ பொருளாதாரத்தை வைத்து என்ன செய்வது?.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்‌.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...