கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (37), இவரது கணவர் திருப்பதி என்னும் தம்பா (38), இவர் தனியார் கார் விற்பனை மையத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2002 ஜூன் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. அவர்கள் எட்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து திருப்பதி தினமும் வேலை முடித்தவுடன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அனிதாவை சித்திரவதை செய்யபடுவதாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது கணவர் சித்திரவதை தாங்க முடியாமல், அனிதா கடந்த 2013-ல் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பினார். பின்னர் திருப்பதி தற்போது அவரது வீட்டில் அவரது நண்பர்களை அழைத்து குடிபோதையில் அவரது நண்பர்களுடன் மிக மோசமாக செயல்களில் அனிதாவை அழைப்பதாக கூறப்படுகிறது.



பின்னர், இறுதியாக அனிதா தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தன் கணவருக்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும், சூலூர் காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்கவும், இதற்கு தனக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றும் அனிதா தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...