நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு - நூற்பாலைகள் அறிவிப்பு!

நூல் விலையை 15 நாளைக்கு ஒருமுறை வெளியிடப்படும் என நூற்பாலைகள் அறிவித்திருந்த நிலையில், நூல் விலை உயர்வு பட்டியலை நூற்பாலைகள் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை நூல்களும் கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன.



திருப்பூர்: நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் இன்று அறிவித்துள்ளன.

திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.



தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.



இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையை தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலைகளும் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திலும் நூல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் நீடித்தது.

ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் 25 குறைந்தது. இதற்கிடையே நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்டு) நூல் விலையை நூற்பாலைகள் கடந்த 1ம் தேதி அறிவித்தன. இதில் கடந்த மாத விலையே தொடரும் எந்த மாற்றமும் இல்லை என நூற்பாலைகள் அறிவித்தன.

இந்நிலையில், நூலின் விலையை மாதத்திற்கு இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியிடுவதாக நூற்பாலைகள் அறிவித்தன. அதன்படி இன்று நூற்பாலைகள் நூல் விலை பட்டியலை வெளியிட்டனர்.

அதில், அனைத்து வகை நூல்களும் கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு கிலோ 10வது நம்பர் கோம்டு நூல் ரூ.175க்கும், 16ஆம் நம்பர் ரூ.185-க்கும், 20ஆவது நம்பர் கோம்டு நூல் ரூ.243-க்கும், 24-ம் நம்பர் ரூ.255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 40-ம் நம்பர் ரூ.300-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.235-க்கும், 24-ம் நம்பர் ரூ. 245-க்கும், 30-ம் நம்பர் ரூ.255-க்கும், 34-ம் நம்பர் ரூ. 270-க்கும், 40-ம் நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...