ரூபெல்லா தடுப்பூசியால் பள்ளி மாணவருக்கு மூளை காய்ச்சல் ? கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவையில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி போட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் மூளை காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது மகன் கோகுல் அப்பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.  கடந்த மாதம் அப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி மாணவர்களுக்கு போடப்பட்ட நிலையில் மாணவன் கோகுலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகும் குணமாகாமல் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கோகுல்-ன் பெற்றோர் கோவை அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவனுக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மாணவனின் உடல்நிலை அவ்வப்போது குணமாவதும் திடீரென அவன் மனநிலை பாதிக்கப்பட்டது போல் காணப்படுவதும் அவரது பெற்றோரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  ரூபெல்லா தடுப்பு மருந்து 15 வயதுக்குட்பட்டோருக்கு கட்டாயம் என்ற அடிப்படையில் அரசு வழங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் இதேபோன்று குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவது தொடர்கதையாகி வருவது பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...