கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 91-வது வார்டு அப்துல்கலாம் வீதி மற்றும் 77-வது வார்டு செல்வபுரம் ஆகிய பகுதியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணி ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனைவருக்கும் வீடுகட்டும் பணி ஆணைகளை வழங்கினார்.
இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, கோட்டாட்சியர் மதுராந்தகி ஆகியோர் பங்கேற்றனர்.