ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா - அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.



கோவை: ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகர் அருளை பெற்றனர். இந்தவிழாவில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவையில் மிகவும் பழமை வாய்ந்த பொள்ளாச்சி சாலையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குருமரகுருபர சுவாமிகள் தலைமையில் சிறப்பு வேள்வி யாக பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மேல தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி புனித நீர் எடுத்துவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டது.

இதனையடுத்து பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஈச்சனாரி விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...