விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கியதை கொண்டாடிய கோவை மக்கள்!

சந்திராயன் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை காண கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிறப்பு ஒளித்திரை மூலம் ஒளிபரப்பப்பட்ட நிலையில், விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் கோவை மாவட்ட மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.



கோவை: விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை கோவை மாவட்ட மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.



சந்திராயன் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. Soft Landing முறையில் தரையிறக்கப்பட்ட அந்த நிகழ்வை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வு குறித்து பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.



அதுமட்டுமின்றி விக்ரம் லேண்டர் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்க வேண்டுமென பல்வேறு மக்கள் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.



இந்நிகழ்வின் தகவல்கள் புகைப்படங்கள், வீடியோக்களை இஸ்ரோ பகிர்ந்தது. அவை பல்வேறு இடங்களில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது.



அதன்படி, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒளித்திரை டவரில் அந்நிகழ்வு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதனை பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பார்த்து கைத்தட்டி வெற்றியை கொண்டாடினர்.



அதில் ஒரு முதியவர் வந்தே மாதரம் முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மற்றொரு நபர் கையில் தேசிய கொடி ஏந்தியபடி வந்து பாரத் மாதா கீ முழக்கங்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



மேலும் டவுன்ஹால் பகுதியை சேர்ந்த நந்தன கிருஷ்ணன் என்ற எட்டாம் வகுப்பு பயிலும் சிறுவன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...