சென்னை செங்கல்பட்டுவை சேர்ந்த நடராஜன் 15 வயது முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கேரள மாநிலம் சித்தூர் வண்டிதாவளம் பகுதியை சேர்ந்த காமாட்சியுடன் திருமணமாகி 18 வயதில் ஒரு பெண் உள்ளார். முதன் முதலில் பொது தண்ணீர் அத்தியாவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து அடையாறு வரை நடைபயனம் மேற்கொண்டு உள்ளார். பின்னர் மெட்ராஸ் ரேஸ் கிளப் துவங்கி பெங்களூர் வரை நடை பயணம் மேற்கொண்டு உள்ளார்.

தற்போது மழை வேண்டி பழனிக்கு நடை பயனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தவர் தனக்கு பொருளாதார ரீதியாக யாரும் உதவ முன்வருவதில்லை என கூறியவர் சில நல்ல மனிதர்கள் நடை மன்னன் நடராஜன் என்பதால் சிறிய உதவி அளிப்பதாக தெரிவித்தார்.மேலும் வயது முதிர்ச்சி காரணமாக எங்கும் பணிக்கு செல்ல முடியாத சூழலில் முடிந்த வரை மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வேன் என்றார்