விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள், சந்திரயானின் மாதிரியை தத்ரூபமாக வடிவமைத்தனர். மேலும் மாணவர்கள் தங்கள் கன்னங்களில் சந்திராயன் மற்றும் தேசிய கொடியை வரைந்து அசத்தியுள்ளனர்.
கோவை: கோவையில் பள்ளி மாணவர்கள் விக்ரம் லேண்டரிலிருந்துபிரக்யான் ரோவர் இறங்குவது போல் தத்ரூபமாக வடிவமைத்ததுடன் மாணவர்களின் கன்னங்களில் சந்திரயான் விண்கலத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிக்கரமாக தரையிறக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர். நாடு முழுவதும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள், சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக கையாண்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்திராயனின் மாதிரியை தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.
இதில் விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் இறங்குவது போல் மாணவர்கள் தயாரித்ததோடு, கன்னங்களில் சந்திரயான் 3 விண்கலம் மற்றும் தேசிய கொடியை வரைந்து அசத்தினர்.

தொடர்ந்துகோவையிலிருந்து விண்கலம் தயாரிப்பதற்காக உதிரி பாகங்கள் எடுத்து செல்லப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ இயக்குனர் வீரமுத்துவேல் இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததை பள்ளி மாணவர்கள் கொண்டாடினர்.