வாரத்தில் 7 நாட்களும் கோவை - பொள்ளாச்சி ரயிலை இயக்க கோரிக்கை!

கோவை - பொள்ளாச்சி இடையே பயணிகளுக்கான ரயிலை, ஏழு நாட்களிலும் இயக்க வேண்டுமென்று, தி.மு.க., எம்.பி., மற்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒருமித்த கோரிக்கை மனுவை, ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளனர்.


கோவை: கோவை - பொள்ளாச்சி ரயிலை வாரத்தில் 7 நாட்களும் இயக்க வேண்டும் என அதிமுக, திமுக சார்பில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு ஒருமித்த கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

கோவையின் ரயில் தேவைகளுக்காக, மத்திய அமைச்சர்கள், ரயில்வே வாரிய அதிகாரிகள் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் என பலரையும் சந்தித்து, கொங்கு மண்டல மக்கள் பிரதிநிதிகள், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ச்சியாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மனுக்களையும் மலை போல குவிக்கின்றனர்; அவற்றில் 10 சதவீதக் கோரிக்கைகளைக் கூட ரயில்வே நிறைவேற்றவில்லை. கோவையிலுள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் தரும் வருவாய்க்கும், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளுக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.

குறைந்தபட்சம், பல ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களையாவது, மீண்டும் இயக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாலும், அதையும் ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்வதேயில்லை. கோவையை ரயில்வே துறை, தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதற்கு எதிராக, பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து குரல் கொடுத்தாலும், அதற்கும் பலனில்லாத நிலை தொடர்கிறது.

அதனால் ரயில் கோரிக்கைகளுக்காகவும், தேவைகளுக்காகவும், எல்லாக் கட்சியினரும், அமைப்பினரும் இணைந்து போராட வேண்டுமென்று, மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, இரு கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும், ஒருமித்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

கட்சி பேதம் இல்லை பொள்ளாச்சி எம்.பி., (தி.மு.க.,) சண்முகசுந்தரம், எம்.எல்.ஏ.,(அ.தி.மு.க.,) பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆகிய மூவரும், மத்திய ரயில்வே அமைச்சருக்கு, ஒரே மாதிரியான மனுக்களை அனுப்பியுள்ளனர். அதில், தற்போது வாரத்தில் ஆறு நாட்கள் கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை, வாரத்தில் ஏழு நாட்களும் இயக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ரயில், இப்போது பொள்ளாச்சியில் தினமும் காலை 7:25க்குக் கிளம்புகிறது; கோவையில் மாலை 6:45 மணிக்குப் புறப்படுகிறது. சனி மாலையும், ஞாயிறு காலையும் இந்த ரயில் இயக்கப்படுவதில்லை.

ஆனால், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஏராளமான மக்கள் இவ்விரு நகரங்களுக்கு இடையில் மருத்துவம், வர்த்தகம் மற்றும் குடும்பத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளின் பொருட்டு, இந்த ரயிலை ஏழு நாட்களும் இரு வேளைகளிலும் இயக்க வேண்டுமென்று அதில் கோரியுள்ளனர்.

இந்த கோரிக்கையாவது ஏற்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கோவை - மேட்டுப்பாளையம் இடையே, வாரத்தில் ஏழு நாட்களும் தினமும் ஐந்து முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல, கோவை - பொள்ளாச்சி இடையிலும், அதிகளவு எண்ணிக்கையில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்பது, நீண்டகால கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...