வருவாய் ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப சரிபார்ப்பு பயிற்சி!

கோத்தகிரி வட்டார தாசில்தார் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை எப்படி சரிபார்த்து செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்பட்டன.


நீலகிரி: கோத்தகிரி வட்டார தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வருகிற செப்டம்பர் முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அவ்வாறு, சரிபார்த்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக, தமிழக அரசின் முகமை இயக்ககம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.அந்த செயலியை எப்படி செயல்படுத்துவது? என்பது தொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி வட்டார தாசில்தார் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை எப்படி சரிபார்த்து செயலியில் பதிவேற்றம் செய்வது என்பது குறித்த பயிற்சி முகாம், குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமையில் நடந்தது.

முகாமில் அலுவலர்கள் பேசியதாவது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயலியில் ஊழியர்கள் செல்போன் எண், கடவுச்சொல்லை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். கணினியில் புதிய படிவம், சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என 2 பிரிவுகள் இருக்கும். அங்கு புதிய படிவத்தை தேர்வு செய்து, அதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, ஆதார் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து சமர்ப் பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியும் வகையில் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே ஊழியர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து செயலியில் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் 11 ஊராட்சி செயலர்கள் உள்பட மொத்தம் 69 பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...