மதுக்கரை மார்கெட் பைபாஸ் அருகில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையினை (எண் 1761) இடம் மாற்றி திருமுருகன் நகர் குடியிருப்பு பகுதியில் அமைக்க டாஸ்மாக் நிறுவாகம் முடிவு செய்துள்ளது.
இப்பகுதியானது பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதாலும், விவசாய தோட்டங்களுக்கு செல்ல இந்த டாஸ்மாக் கடையை தாண்டி தான் மக்கள் செல்ல வேண்டி உள்ளதாலும் இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிப்படைவர்.
மேலும், இந்த டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்தின் அருகே தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.
எனவே, இந்த டாஸ்மாக் கடை இங்கு அமையும் பட்சத்தில் இங்குள்ள பொதுமக்களுக்கு பெரியளவிலான இடையூறுகளை ஏற்படுத்தும்.

எனவே, குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைப்பதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருமுருகள் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.