கோவில்களில் நடக்கும் தவறுகள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

நொய்யல் திருவிழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் தவறு நடக்கின்ற பட்சத்தில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டறிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.


கோவை: கோவில்களில் நடக்கும் தவறுகள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோவை பேரூர் பகுதியில் நடைபெற்ற வரும் நொய்யல் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,

மலைக்கோவில்களில் வயது முதிர்ந்தோர்கள் உடல் நலத் தோய்வு இருப்பவர்களுக்கு உதவியாக இருக்க ரோப் கார்கள் தானியங்கி மின்தூக்கிகள் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்ததன் படி அனுவாவி சுப்பிரமணிய கோவிலில் ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அய்யர் மலையில் தோய்வாக இருந்த ரோப் கார் அமைக்கும் பணி சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி உள்ளிட்டவை விரைவுபடுத்தி பணிகள் நிறைவு செய்கின்ற சூழலை உருவாக்கி இருக்கின்றோம். அதுமட்டுமின்றி திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரோப் கார்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டுள்ளது.

அதேபோல் மருதமலையில் லிப்ட் அமைக்கின்ற பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. சுவாமி மலையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் லிப்ட் அமைக்கின்ற பணிக்கு சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதுபோன்று மலை சார்ந்து இருக்கின்ற பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்களின் இறை தரிசனத்திற்காக ரோப் கார்கள் அமைப்பது லிப்ட் அமைப்பது என்று திராவிட மாடல் ஆட்சியின் ஒரு பங்களிப்பாக இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுத்துள்ளது.

சமயங்கள் என்பது ஏதோ சன்னிதானங்களை சார்ந்தது என்று மட்டுமல்லாமல் சமூகத்தை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் சமூக நல்லிணக்கத்திற்காக நொய்யல் பெருவிழாவை ஒரு வார காலத்திற்காக பேரூர் ஆதீனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை துறையின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழில் குடமுழுக்கு என்றாலும் சரி அன்னை தமிழில் அர்ச்சனை என்றாலும் சரி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றாலும் சரி ஒரு சமூக நீதிப் புரட்சிக்கு அடித்தளமாக இருக்கின்ற பல்வேறு கொள்கைகள் காரணங்களுக்கு கட்டுக்கோப்போடு எங்களது கரங்களை உயர்த்திப் பிடிக்கின்ற சாமிகளின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நீரின்றி அமையாது உலகு என்ற மாணிக்க வரிகளுக்கு ஏற்ப நதிகளை பாதுகாக்கின்ற அவரது இம்முயற்சிக்கு தமிழக அரசும் திராவிட மாடல் அரசும் தமிழக முதல்வரும் இந்து சமய அறநிலையத்துறையும் என்னாலும் அவரது கரத்தை நாங்கள் பிடித்திருப்போம். அவருடைய இம்முயற்சிக்கு அனைத்து விதத்திலும் அரசு ஒத்துழைப்பு நல்கும்.

நீர் என்பது தனியாக பிரிக்க முடியாத மனித உயிரோடு கலந்த ஒரு பொருள் நீர் இல்லை என்றால் உணவில்லை உணவில்லை என்றால் மனிதன் வாழ உகந்த சூழ்நிலை இல்லை எனவே அந்த நீரை நாம் பாதுகாப்போம். இந்த நீர் பாதுகாக்கும் விழிப்புணர்வை நாம் வலியுறுத்துவோம். பேரூர் கோவிலில் அறங்காவலர் இல்லாதது குறித்த கேள்விக்கு வெகுவிரைவில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவில்களில் தவறு நடக்கின்ற பட்சத்தில் 24 மணி நேரத்திற்குள் தவறுக்கு உண்டான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேரூர் கோவிலில் தர்ப்பணம் தருகின்ற இடத்தில் அடிப்படை வசதிகளை விரைவுப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...