சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானம் மூலம் தங்க பிஸ்கெட்டுகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை கோவை வந்தடைந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒலிப்பெருக்கி ஒன்றின் அடிப்பக்கத்தில் வைத்து 1 கிலோ 406 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து, தங்க பிஸ்கெட்டுகளை கடத்தி வந்த கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த திவாகரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்க பிஸ்கெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.41 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதேபோல், கடந்த 11ம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் 1கிலோ 166 கிராம் தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வந்தவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.