நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்கப்படாததைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரேசன் கடை முற்றுகையிடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் உட்பட 6 தாலுகாவில் உள்ள 404 நியாயவிலைக் கடையில் இதுவரை 89 நியாயவிலைக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொது விநியோக பொருட்கள் அதிமுக-வினரால் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும், வழங்கப்பட வேண்டிய பொருட்களை எவ்வித பாரபட்சமுமின்றி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து அனுமதியின்றி உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 1441 திமுக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.