நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்கப்படாததைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரேசன் கடை முற்றுகையிடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வால்பாறையில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் தி.மு.க நகர செயலாளர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்தின் போது நியாய விலைக் கடையில் முறையாக அனைத்து மக்களுக்கும் பொருட்கள் வழங்க வேண்டும் என திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர செயலாளர் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.