உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடசே பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா நிறைவு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா கடந்த 26 ம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் இறுதி நாள் நிகழ்வாக நேற்று சதுஸ்த்தான அர்ச்சனம் ஹோமமும், மகாபூர்ணாஹுதி, திருமஞ்சனம், மஹாநிவேதனம், கோஷ்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழாவில் கலந்து கொண்டால் தீர்க்காயுள், சந்ததிகள், செல்வம், புகழ், தேக ஆரோக்கியம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் உண்டாகும் துக்கங்கள், சத்துருக்களால் ஏற்படும் பயம் மற்றும் வியாதிகள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பதால் கடந்த 4 நாட்களாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா கடந்த 26 ம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் இறுதி நாள் நிகழ்வாக நேற்று சதுஸ்த்தான அர்ச்சனம் ஹோமமும், மகாபூர்ணாஹுதி, திருமஞ்சனம், மஹாநிவேதனம், கோஷ்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.



விழாவையொட்டி வெங்கடேசப் பெருமாள், ஆண்டாள், பத்மாவதி தாயார், லட்சுமிஹயக்ரிவர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



மேலும் பக்தி இன்னிசை நிகழ்வில் பெண்கள் கும்மியாட்டத்தில் ஆடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்த விழாவானது வைணவ ஆலயங்களில் செய்யப்பட வேண்டிய நித்திய பூஜைகள், நைவேத்தியங்கள், வழிபாட்டு முறைகளில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் தவறுதலாக உண்டாகும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவதற்கு நடத்தப்பட்டது.



இதில் கலந்து கொண்டால் தீர்க்காயுள், சந்ததிகள், செல்வம், புகழ், தேக ஆரோக்கியம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் உண்டாகும் துக்கங்கள், சத்துருக்களால் ஏற்படும் பயம் மற்றும் வியாதிகள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பதால் கடந்த 4 நாட்களாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...