கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் விழாவில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் மக்கள் பயனடைந்து உள்ளதாக தெரிவித்தார்.
கோவை: தாய்மார்களின் சகோதரனாக மானியத்தை உயர்த்தி கேஸ் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளார் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் முன் களப் பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடினார்.

பின்னர் முன் கள பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த விழாவில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேசியதாவது,

ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி இந்திய நாட்டு சகோதரிகள் நலம் பெறும் வகையில் ஒரு சகோதரனாக சமையல் கேஸ் விலையை குறித்து மானியத்தை அதிகப்படுத்தி உள்ளார். ஒரு சகோதரனாக, சகோதரிக்கு அண்ணன் செய்வதை போன்று நாட்டு மக்களுக்கு மோடி மானியத்தை குறைத்து உள்ளார்.
நாட்டிலேயே 75 லட்சம் மக்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்து இருக்கிறார்கள். இது வரவேறக் கூடிய ஒன்று நாட்டு மக்கள் சகோதரிகள் இதனால் நலம் பெற உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.