துடியலூர் அரவான் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்..!! பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம்.!

கோவை துடியலூர் அரவான் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை: 300 ஆண்டுகள் பழமையான அரவான் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோபுர கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

கோவை துடியலூர் அரவான் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை துடியலூரில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ அரவான் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் அரவான் திருவிழாவானது குருடி மலை அடிவாரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், ஆரப்பாளையம், தாலியூர், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை, பழனிகவுண்டர்புதூர், அப்பநாய்க்கன்பாளையம், வடமதுரை, வெள்ளகிணர், சுப்பிரமணியம் பாளையம், காசிநஞ்சகவுண்டன்புதூர், ராக்கிபாளையம், வெற்றிலை காளிபாளையம், தொப்பம்பட்டி மற்றும் துடியலூர் என பதினாறு கிராமங்கள் பங்கேற்கும் விழாவாக 18 நாட்கள் நடைபெறும். அவ்வளவு பெருமை வாய்ந்த கோயில் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கடந்த 1-ம் தேதி முளைப்பாரி, தீர்த்த குடங்களுடன் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அம்மன் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து 2ம் நாளில் முதல் கால வேள்வி பூஜை தொடங்கியது. அதனையடுத்து இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் இரண்டாம் கால வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. அதனை அடுத்து யாகசாலை மண்டபத்தில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு திருக்கோயிலை வலம் வந்தது.



பின்னர், கோவிலின் கோபுர கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...