கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவிலில் நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை: அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் திருப்பணிகள் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள் நல்லாசியுடன் நடைபெற்று கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து கோவிலில் நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த வியாழக்கிழமை கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கி முளைப்பாரி, தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை இரண்டாம் கால யாகம், மூன்றாம் கால யாகங்கள் நடைபெற்றன.
இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காரமடை சிவஸ்ரீ ஆதியோகேஸ்வர சிவம் குழுவினர் நடத்திவைத்தனர்.
தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.