தேசிய ஊட்டச்சத்து மாதம்..!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதம் குறித்தான விழிப்புணர்வு கண்காட்சியில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள், பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதம் குறித்தான விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.



இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா துவக்கி வைத்து பார்வையிட்டார்.



இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள், பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



இதில் ஊட்டச்சத்து மாத உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார். இம்மாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...