நீலகிரி மாவட்டம் உதகையில் செயல்பட்டு வரும் ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் இன்று மருத்துவக் கருத்தரங்கம் துவங்கப்பட்டது. இந்த கருத்தரங்கமானது தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

கருத்தரங்கின் இன்றைய முதல்நாள் அமர்வில் மருத்துவ பயன்பாட்டிற்காக எலி உள்ளிட்ட விலங்குகளை பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், விலங்குகளை அணுகும் முறை குறித்தும் முனைவர் வடிவேலன் விளக்கவுரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆய்வாளர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமாளோர் பங்கேற்றனர்.