சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று (மார்ச் 13) திடீரென முத்துகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் தில்லி ஜெ.என்.யு-வில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள வாடிக்கையாளர் சேவை மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதைத் தொடர்ந்து அலுவலக வாயில் மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாயில் முன்பு அமர்ந்த மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஜாதிய கட்டமைப்பு காரணமாகவே இவ்வாறு தற்கொலைகள் தொடர்ந்து வருவதாக தெரிவித்த மாணவர்கள், இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.