கோவையின் முக்கிய நீராதாரமாக விளங்குவது சிறுவாணி நதி. கடந்த சில நாட்களாக சிறுவாணியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.
தொடர்ந்து, அணையில் இருந்து நீர் உறிஞ்சும் வால்வுகளுக்கும் கீழே நீர்மட்டம் சென்றது. இதனால் கோவையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தொடர்ந்து அத்யாவசியப் பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாததால் ஆங்காங்கே பொதுமக்கள் காலிக் குடங்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கோவை மாநகரில் கடந்த 3-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் லேசான மழை பெய்த்தது. இந்த கோடை மழை தொடரும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கோவை, நீலகிரி, வால்பாறை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்திருந்த போதிலும், சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை மாநகரில் கோடை மழை பெய்த போது, சிறுவாணி பகுதியிலும் மழை பெய்யும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தோம். ஆனால், சிறுவாணி ஆறு உற்பத்தியாகும் இடங்களிலோ, அல்லது நீர்பிடிப்பு பகுதிகளிலோ மழை பொழிவு இல்லை. அணையிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது'. இவ்வாறு அவர் கூறினார்.