சிறுமுகை வனத்துறை சார்பில் முன்கள பணியாளர்கள் விழிப்புணர்வு முகாம்!

சிறுமுகை வனத்துறை சார்பில் முன்களப் பணியாளர்கள், மனிதன் - வனவிலங்கு மோதலை கையாள்பவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு வனத்துறைக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.


கோவை: சிறுமுகை வனத்துறை சார்பில் முன்கள பணியாளர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் சிறுமுகை வனத்துறை சார்பில் முன்களப் பணியாளர்கள், மனிதன் -வனவிலங்கு மோதலை கையாள்பவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் அடுத்த வச்சினாம்பாளையம் கிராமத்தில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், கோவை மாவட்ட ஓய்வுபெற்ற உதவி வனப்பாதுகாவலர் நசீர், கோவை வன கால்நடை மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குநர் என்.எஸ்.மனோகரன், கோவை இணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதில் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேசியதாவது, காட்டுப்பன்றி இனப்பெருக்கம் அதிகமாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்த வனச்சட்டத்தை இன்றும் அரசு பயன்படுத்தி வருகிறது. விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றி, மயில், மான், காட்டு யானை ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லிங்காபுரம் கிராமத்தில் முக்கு வளைவில் இருந்து வனச்சோதனை சாவடி வரை யானைகளுக்கான அகழியை அகலப்படுத்த வேண்டும். காட்டு யானைகளைவிட காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனை விவசா யிகள் சுட்டுகொல்ல அனுமதி வழங்க வேண்டும்.

வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேத தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லிங்காபுரம் வனசோதனை சாவடியில் இருந்து காந்தவயல் வரை சாலையின் இருபுறமும் முட்புதர் அதிகளவில் உள்ளது. இதனை அப்புறப்படுத்த வேண்டும்.

லிங்காபுரம் பகுதியில் யானை தொல்லை அதிக ளவில் உள்ளது. விஸ்கோஸ் பகுதி யானைகள் முகாம் போல உள்ளது. எனவே அங்கு யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதி ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு டார்ச் லைட் வழங்க வேண்டும்.

இரவு 6 மணிக்கு மேல் கிராமத்தில் நுழையும் யானைகளை விரட்ட வனத்துறை யினர் உடனடியாக வர வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து வனச்சரக அலுவலர் மனோஜ் பேசியதாவது, பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கிராம பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நாட்டு வெடி குண்டு மூலம் வேட்டையாடுபவர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...