கோழி கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் - மக்கள் அச்சம்!

மூலனூர் - சின்னக்காம்பட்டி சாலையோரங்களில் கோழி கழிவுகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூர் - சின்னக்காம்பட்டி சாலையோரங்களில் கோழி கழிவுகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி பகுதியில் முக்கிய தொழில்களில் ஒன்று கறிக்கோழி வளர்த்தல் ஆகும். மூலனூர் சின்னக்காம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

இந்நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், பண்ணைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுவதாலும் மற்றும் கோழிகளுக்கு கொடுக்கும் தீவனங்களின் கலவைகள் அதிகமாகவோ, குறைவாகவோ கொடுத்து விடுவதாலும் கோழிகளுக்கு அதிக அளவில் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

அதை விவசாயிகள் சரி வர கவனிக்காத காரணத்தினாலும் பண்ணையில் வளரும் கோழிகள் அதிக அளவில் இறந்து விடுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு இறக்கின்ற கோழிகளை விவசாயிகள் சாக்கு மூட்டைகளில் கட்டி சாலையோரங்களில் போட்டு விடுகின்றனர். சில நேரங்களில் திறந்த வெளியில் கொட்டி விடுகின்றனர். இதனால் இரண்டு மூன்று நாட்களில் கோழிகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது.

அந்த பகுதியில் உள்ள நாய்கள், காக்கைகள் சாக்கு மூட்டைகளை கடித்து குதறுவதால் அழுகிய கோழிகள் ரோட்டில் சிதைந்து கிடக்கின்றன. இதனால் கொசுக்கள் ஈ தொல்லைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகின்றது.

மேலும் காக்கைகள் இந்த அழுகிய இறைச்சி துண்டுகளை தூக்கி கொண்டு போய் தோட்டங்களில் கால்நடைகளுக்கு வைத்திருக்கும் தண்ணீர் தொட்டிகளில் போட்டு விடுவதால் இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது.

இறந்த கோழிகளை சாப்பிட்டு பழகிய நாய்கள் கோழிகள் கிடைக்கவில்லை என்றால் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை கடிக்க தொடங்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.

இதுபற்றி இப்பகுதி மக்கள் கூறியதாவது, நடவடிக்கை எடுக்க ேகரிக்கை கோழி பண்ணை விவசாயிகள் செத்த கோழிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி சாலையோரங்களில் போடுவதால் துர்நாற்றம் அதிகமாகி சுகாதார சீர்கேடால் கொசு உற்பத்தி அதிகமாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இதனால் டெங்கு காய்ச்சல் நோய் பரவும் நிலை ஏற்படுகிறது. இது பற்றி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை, தற்போது மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...