நீலகிரியில் ரூ. 4.6 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை - அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் 4.6 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


நீலகிரி: தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், உலிக்கல் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நான்சச் சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளியில் 2019-2020 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஆனைப்பள்ளம் சாலையினையும், 2022-2023-15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை பிரதான சாலை முதல் வெள்ளாளமட்டம் வரை முடிக்கப்பட்ட சிமெண்டு சாலை என மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

பின்னர் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார். மேலும், அவர் 2022-2023 நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.23 கோடி மதிப்பில் முத்தநாடு ரோல் மட்டம் முதல் பவானி வரையிலும், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பனாட்டி பிரிவு முதல் இருட்டு சோலை, கொலக்கொம்பை முதல் முத்தநாடு வரையிலும், ரூ.1.83 கோடி மதிப்பில் ட்ரூக் முதல் நான்சச் தேயிலை தொழிற்சாலை வரை சாலை மேம்பாட்டு பணிகள் என மொத்தம் ரூ.4.06 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார். செங்கல்புதூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ளும் விதமாக பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...