தாராபுரத்தில் மௌனானந்தர் கலைக்குழு வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி - ஏராளமானோர் கண்டுகளிப்பு!

அரசு பள்ளிகளிலும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அனைவரும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை தரும் மௌனானந்தர் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.



திருப்பூர்: அரசு பள்ளிகளிலும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என மௌனானந்தர் கலை குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம் பாளையம் கிராமத்தில் காளியம்மன் கோவில் வளாகத்தில் மௌனானந்தர் கும்மி கலை குழுவினர் சார்பில் 8வது அரங்கேற்ற விழா வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ஒரே இடத்தில் 200 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர்.



இதைக் காண தாராபுரம், அலங்கியம் தளவாய்பட்டிணம் சத்திரம் கோவிந்தாபுரம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வள்ளி கும்மி ஆசிரியர் வரப்பாளையம் சண்முகசுந்தரம், தலைமை வகித்தார்.கனகராஜ், ஈஸ்வரன், செல்வராஜ், ஆகிய இணை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் கூறியதாவது, கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது.



கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர்.

நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன.

திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது.



அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில், திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.

மேலும் அரசு விழாக்களில் வள்ளி கும்மியாட்டத்தை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் வள்ளி கும்மியாட்ட குழுவினரை நல வாரியத்தில் இணைக்க வேண்டும். இந்த பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டத்தை உலகறிய செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

அரசு பள்ளிகளிலும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அனைவரும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை தரும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...