ஜி.எஸ்.டி வரி, திடீர் சோதனையால் முடங்கும் சூழலில் இரும்பு வியாபாரம்!

இரும்பு உள்ளிட்ட உலோக பொருட்களை ஸ்கிராப் செய்து சந்தைப்படுத்தும் தொழில் செய்து வரும் தொழில் முனைவோர், தற்போது ஜிஎஸ்டி வரி மற்றும் திடீர் சோதனையால் தங்களது தொழில் முடங்கும் சூழலில் உள்ளதாகவும், வரி குறைப்பு, மானியம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: ஜிஎஸ்டி மற்றும் திடீர் சோதனை காரணமாக இரும்பு உள்ளிட்ட உலோக ஸ்கிராப் தொழில் முடங்கும் சூழலில் இருப்பதாக தொழில் முனைவோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இரும்பு உள்ளிட்ட உலோகங்களை ஸ்க்ராப் செய்து சந்தைபடுத்தும் குறுந்தொழில் வர்த்தம் கோவையில் பெருமளவில் நடக்கின்றன. வாகனங்கள், இயந்திரங்கள், சாதங்களின் பயன்பாட்டுக்கு பின்னர் அதனை மறு சுழற்சிக்காக ஸ்கிராப் செய்து சந்தை படுத்தும் இந்த வர்த்தகத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கின்றனர்.



இந்த தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர் வருடாந்திர பொதுக்குழு கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்கிராப் தொழிலின் நெருக்கடி மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து விவாதிக்கப்பட்டன.

அப்போது பேசிய நிர்வாகிகள், இரும்பு வியாபாரிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சோதனை என்ற பெயரில் எங்கள் கம்பெனிக்குள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள்சோதனை செய்து வருகிறார்கள். இது தொழில் வளர்ச்சிக்கு தடையாக அமைந்திருக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு தொழிலை பாதித்துள்ளது.



முன்பு 4 சதவிகிதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டிக்கு பின்னர் 18 சதவீதமாக உயர்ந்திருக்கின்றன. வரி உயர்வினால் கூடுதல் செலவினங்கள் உள்ளிட்டவற்றால் லாபம் ஈட்ட முடியவில்லை. பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகள் கொடுக்கப்பட்டு வருவதால், சிறு குறு தொழில்களுக்கு எந்தவித சலுகையும் கிடைப்பதில்லை.

அதேபோல இரும்பு ஸ்கிராப் லாரிகளில் வந்தால், அது எங்கிருந்து வந்தது என நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள். நாங்கள் இதனால் ரத்தக்கண்ணீர் வடித்து வருகிறோம். 40 லட்சம் ரூபாய் வரையிலான வர்த்தகத்துக்கு மானியம் தரப்படுகின்றன. ஆனால் இரும்பு உள்ளிட்ட உலோகங்களின் விலை விண்ணை தொட்டிருக்கின்றன.

எனவே, 5 கோடி வரையிலான வர்த்தகத்துக்கு மானியம் வழங்க வேண்டும் எனவலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற நெருக்கடியினால் 70% சிறு குறு தொழில் இரும்பு வியாபாரிகள் தொழிற்சாலைகளை மூடி விட்டார்கள். ஆகவே ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...