கோவை மாவட்டத்தில் கடந்த சில காலமாக பருவமழை பொய்த்துப்போனதைத் தொடர்ந்து கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி ஊரக பகுதிகளில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாக பொதுமக்கள் தங்களுடைய குடிநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் குடிநீர் புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
எனவே ஊரக பகுதிகயில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 1800 599 6000 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.