வாயில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்த குட்டியானை வனத்துறையினரின் போராட்டத்தால் மீட்கப்பட்டது


கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 யானைகள் கொண்ட கூட்டம் செங்கச்சூலை, குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது. இதில் இருந்து தாய் மற்றும் குட்டியானை மட்டும் தனியாக பிரிந்து குடியிருப்புகளின் அருகிலேயே சுற்றித்திரிந்தது.

இந்நிலையில், தாய் யானையை விட்டு பிரிந்து வந்த குட்டியானை குடியிருப்பு பகுதியிலேயே முகாமிட்டு சுற்றிவந்தது. இதனிடையே அந்த யானை வாயில் பலத்த காயம் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் தொடர்ந்து அந்த யானைக்கு உணவு மூலம் மருந்து கலந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் யானையின் வாயில் ஏற்பட்டுள்ள காயத்தில் மாற்றம் இல்லாததால் மருந்து கலந்த உணவை குட்டி யானைதான் உண்கின்றதா, அல்லது வேறு ஏதேனும் யானை உண்டு விடுகிறதா என்று வனத்துறையினர் குழப்பமடைந்தனர்.

பின், அந்த குட்டியானையை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவுசெய்த வனத்துறையினர் கும்கி யானைகளை வரவழைத்து பிடிக்க முயற்சிக்கையில் அந்த குட்டி யானை அப்பகுதியில் இருந்து காணாமல் போனது. 

இதனிடையே, இன்று காலை மாங்கரை வன அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் யானைக்கான உணவுகளை வனத்துறையினர் செய்துகொண்டிருக்கையில் அந்த குட்டி யானை மோப்பம்பிடித்து அப்பகுதிக்கு சென்றது. 

இதனைக்கண்ட மாவட்ட வன அதிகாரி பாலசுப்பிரமணியம், கால்நடை மருத்துவர் மனோகரன் உள்ளிட்ட 40 வன அதிகாரிகள் பிரத்யேக துப்பாக்கியின் மூலம் மயக்க ஊசி செலுத்தி குட்டி யானையை பிடித்தனர்.

தற்போது அந்த யானையை சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...