கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி வருவாய் பிரிவு சார்பாக கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் வரிவசூல் செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளில் சொத்து வரி செலுத்தாத வரிதாரர்கள் உடனடியாக அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டும். மேலும், மாநகராட்சி வரி வசூலர்கள் அவர்களுடைய வார்டு பகுதிகளில் வரி செலுத்தாத நிலுவைதாரர்களிடம் தீவிர வரிவசூல் பணியில் ஈடுபட்டு 100 சதவீதம் வரி வசூல் செய்ய அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சொத்து வரி மற்றும் இதர வரிகள் செலுத்தாத நிலுவைதாரர்களின் குடிநீர் குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறும், வரி செலுத்தாத நிலுவைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி, உதவி ஆணையர் (வருவாய்) ரவிக்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், சிறப்பு வரி ஆய்வாளர்கள், வரி வசூலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.