கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில், பாரதப் பிரதமர் விஸ்வகர்மா திட்டம் துவக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற கருப்பொருளில் பாரத பிரதமர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும், இதில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் மிக முக்கியமானது எனவும் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில், பாரதப் பிரதமர் விஸ்வகர்மா திட்டம் துவக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கோயம்புத்தூர் மாவட்ட துணை ஆட்சியர் பி.சுரேஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கைவினை கலைஞர்கள், விஸ்வகர்மா சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் பேசுகையில், பாரதப் பிரதமரின் பிறந்தநாள் அன்று துவங்கப்பட்டுள்ள பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்கள் பிணையில்லா கடன் உதவி பெற்று தொழில் வளர்ச்சி பெற முடியும் எனவும், இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டம் பெரும் பயன் அடையும் எனவும் தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பேசுகையில், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற கருப்பொருளில் பாரத பிரதமர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும், இதில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் 18 வகையான தொழில்கள் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், பயிற்சி முடித்த பின்பு ரூபாய் 15 ஆயிரம் மதிப்பிலான தொழில் உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ரூபாய் 2 லட்சம் வரை பினையில்லா கடன் உதவி வழங்கப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் தரமான பொருட்கள் உற்பத்தி செய்வதோடு, அதனை சந்தைப்படுத்துவதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு தொழில் முன்னேற்றம் அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்த பின்பு ஆங்கிலேயர்கள் வெளியேறி விட்டாலும், நமது நாட்டின் பாரம்பரிய தொழில் மற்றும் கலைகளை ஊக்குவிக்காமல் இருந்து வந்த நிலையில், பாரத பிரதமரின் முயற்ச்சியில் பாரம்பரியமிக்க கைவினை தொழில்கள் இன்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துவாரகாவிலிருந்து பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நேரலை செய்யப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...