சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நாளை 2500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2500 விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது தெரியவந்து உள்ளது.


கோவை: கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடிஉயர ராஜவிநாயகர் சிலை மற்றும் தெப்பக்குளம் மைதானத்தில் பிரமாண்ட வெற்றி விநாயகர் சிலை ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாநகரம்-மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம்.

அதன்படி கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளில் இந்து முன்னணி, விசுவஇந்துபரிஷத், பாரத் சேனா, சிவசேனா, அனுமன்சேனா, சக்திசேனா, விவேகானந்தர் பேரவை, இந்து மகாசபா, இந்துஸ்தான் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர பொதுமக்கள், பொதுநலஅமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

கோவையில் விநாயகர் சிலைகளை வைக்கும் முன்பாக உரிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்காக பல்வேறு அமைப்புகளும் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக விண்ணப்பித்து உள்ளன.

அதன்படி கோவை மாநகரில் 680, புறநகரில் 1611 விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து உள்ளன. இதுதவிர பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான முயற்சிகளில் உள்ளனர். எனவே கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்த 2500 விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது தெரிய வந்து உள்ளது.

கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடிஉயர ராஜவிநாயகர் சிலை மற்றும் தெப்பக்குளம் மைதானத்தில் பிரமாண்ட வெற்றி விநாயகர் சிலை ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

அதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிறப்பு வழிபாடு-பூஜைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் இந்து அமைப்புகள் முடிவு செய்து உள்ளன. கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதியும், மாநகர பகுதியில் 22-ந்தேதியும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி (விஜர்சனம்) நடக்க உள்ளது.

இதன்ஒரு பகுதியாக கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் நடக்க உள்ள ராஜவிநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பங்கேற்கிறார். காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். தெப்பக்குளம் மைதானத்தில் வெற்றி விநாயகர் விஜர்சன ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முன்னிலை வகிக்கிறார்.

மத்திய இணைமந்திரி முருகன் பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கி வைக்க உள்ளார். கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகரம்- மாவட்ட அளவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சுமார் 2500 போலீசார் பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...