அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு நல்ல புத்தி வழங்க கோரி பல்லடத்தில் பாரத மாணவர் பேரவையினர் நூதன வேண்டுதல்!

சனாதன ஒழிப்பு குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோருக்கு நல்ல புத்தி வழங்க கோரி பல்லடத்தில் பாரத மாணவர் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பு சார்பில் தோப்புக்கரணம் போட்டு நூதன வேண்டுதலில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோருக்கு நல்ல புத்தி வழங்க கோரி பாரத மாணவர் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பு சார்பில் நூதன வேண்டுதலில் ஈடுபட்டனர்.



நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பு ஆகியோர் இணைந்து சமத்துவ விநாயகர் சிலையினை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.



சிறப்பு பூஜைகளோடு தொடங்கப்பட்ட சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான வியாபாரிகள், மாணவர் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பினர் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராகவும் சனாதனத்தை ஒழிப்போம் என பேசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோருக்கும் இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கும் நல்ல புத்தியை கொடு என வேண்டுதல் வைத்து விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன வழிபாடு நடத்தினர்.

சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ச்சியாக பேசி வருவது இந்து தர்மத்திற்கு எதிரானது எனக்கூறி விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன வழிபாட்டில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...