மரம்‌ தங்கசாமி நினைவு நாள்‌ - தமிழகம்‌ முழுவதும்‌ 1.68 லட்சம்‌ மரக்கன்றுகளை நடவு செய்த காவேரி கூக்குரல்‌!

மரங்களுக்காக தன்‌ வாழ்நாளை அர்ப்பணித்த மரம்‌ தங்கசாமியின்‌ நினைவு தினத்தை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ 1.68 லட்சம்‌ மரக்கன்றுகள்‌ கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நடவு செய்யப்பட்டது.


கோவை: மரங்களுக்காக தன்‌ வாழ்நாளை அர்ப்பணித்த மரம்‌ தங்கசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ 1.68 லட்சம்‌ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில்‌ பிறந்த மரம்‌ தங்கசாமி, 'வாழ்வோம்‌ மரங்களுடன்‌' என்ற தாரக மந்திரத்துடன்‌ டிம்பர்‌ மர சாகுபடியை விவசாயிகளிடம்‌ பிரபலப்படுத்தியவர்‌. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளிடம்‌ மரம்‌ சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து மாவட்டத்தையே பசுமையாக மாற்றி காட்டியவர்‌.

விவசாயிகளின்‌ வறுமையை‌ போக்க டிம்பர்‌ மரங்கள்‌ சாகுபடியே சரியான தீர்வு என்பதை உணர்ந்து தன்‌ வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்தவர்‌. அவர்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ தொடக்க கால இயக்கமான ஈஷா பசுமை கரங்கள்‌ திட்டத்துடன்‌ இணைந்து செயல்புரிந்தவர்‌.

இந்நிலையில்‌, அவரின்‌ சேவையை நினைவு கூறும்‌ விதமாகவும்‌, அவரின்‌ நினைவு நாளில்‌ விவசாய நிலங்களில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ ஆண்டுதோறும்‌ மேற்கொண்டு வருகிறது.



அந்த வகையில்‌ இந்தாண்டு, தமிழ்நாடு முழுவதும்‌ 100 விவசாயிகளின்‌ நிலங்களில்‌ சுமார்‌ 4000 ஏக்கர்‌ பரப்பளவில்‌ 1 லட்சத்து 68 ஆயிரம்‌ டிம்பர்‌ மரக்கன்றுகளை விவசாயிகள்‌ மூலம்‌ நடவு செய்து சாதனை படைத்துள்ளது.



சுற்றுச்கூழலுடன்‌ சேர்த்து விவசாயிகளின்‌ பொருளாதாரமும்‌ மேம்படும்‌ வண்ணம்‌, தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள்‌ கடம்பு, மகாகனி, குமிழ்‌, சந்தனம்‌ உள்ளிட்ட விலைமதிப்புமிக்க டிம்பர்‌ மரக்கன்றுகள்‌ ஒரு மரக்கன்று ரூ.3 என்ற குறைந்த விலையில்‌ விவசாயிகளுக்கு மானிய விலையில்‌ வழங்கப்பட்டது.



மேலும்‌, காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ களப்‌ பணியாளர்கள்‌ விவசாயிகளின்‌ நிலத்தின்‌ தன்மை மற்றும்‌ எதிர்கால தேவை ஆகியவற்றை பரிச்லித்து அதற்கேற்ப மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்தனர்‌.



அத்துடன்‌, அவற்றை முறையாக நடும்‌ வழிமுறைகளையும்‌ எடுத்துரைத்தனர்‌.

இதற்கு முன்பு நம்மாழ்வார்‌, நெல்‌ ஜெயராமன்‌, மகாத்மா காந்தி போன்றோரின்‌ பிறந்த நாள்‌ மற்றும்‌ நினைவு நாட்களிலும்‌ இதுபோன்ற மாபெரும்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை இவ்வியக்கம்‌ மேற்கொண்டது குறிப்பிடத்தது. மரம்‌ சார்ந்த விவசாயம்‌ தொடர்பாக இலவச ஆலோசனைகள்‌ பெற விரும்பும்‌ விவசாயிகள்‌ 80009 80009 என்ற எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...