கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “திமுக ஆட்சி போக வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டதாக கூறினார்.



கோவை: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்த மக்களும் நன்றாக இல்லை. மதுரை மாநாட்டை பார்த்து திமுகவினர் பயந்து விட்டனர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “திமுக ஆட்சி போக வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர்.

மதுரை மாநாட்டிற்கு செல்ல உணவு கூட வேண்டாம். வண்டி தயார் செய்து தந்தால் போதும் என தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தனர். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்த மக்களும் நன்றாக இல்லை. மதுரை மாநாட்டை பார்த்து திமுகவினர் பயந்து விட்டனர். திமுக ஆட்சி போய்விடும் என காவல்துறையினர் பயந்து விட்டனர். மதுரை மாநாட்டை பற்றி தெரியாமல், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை படிக்காமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் பெரிய தலைவராகி விட்டார்.



கட்சிக்காக உழைக்காமல் உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வந்தார். அண்ணா ஏழைகளுக்காக ஆரம்பித்த கட்சி, குடும்ப சொத்தாக மாறி விட்டது. எங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி பழனிசாமி கருத்தே எங்களது கருத்து. வேலுமணி, தங்கமணி பாஜக பற்றி பேசவில்லை என சிலர் சொல்கிறார்கள். எங்களுக்கு எதிரி திமுக தான். இருந்தாலும் கூட்டணிக்காக நாங்கள் தன்மானத்தை விட்டு தர மாட்டோம்.

அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது. ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை. அண்ணா பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. பெரியார் வந்த பின்னர் தான் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தது. அண்ணா மன்னிப்பு கேட்டதாக உண்மைக்கு புறம்பான விஷயங்களை அண்ணாமலை பேசியிருக்க கூடாது. இது ஒரு தலைவருக்கு அழகல்ல. அண்ணாமலை உண்மைக்கு புறம்பாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எடப்பாடி பழனிசாமி கிணற்றில் குதிக்க சொன்னாலும் குதிப்போம். எங்களுக்குள் சிண்டு முடியும் வேலையை திமுகவினரும், சில பாஜகவினரும் செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தான் 40 தொகுதிகளிலும் வெல்லும். நமக்குள் இருப்பது குடும்ப சண்டை தான். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. கோவை மாவட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களும் முதலமைச்சராக எடப்பாடி வர வேண்டும் என நினைக்கின்றனர்.

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். எல்லா பிரச்சனைகள் பற்றியும் அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தெளிவாக பேசி விட்டார். எதிர்கட்சி தலைவராக சிறப்பாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அண்ணாமலை மக்களுக்காக உழைத்தவர்களை பற்றி தேவையில்லாமல் பேசியிருக்க கூடாது. அண்ணா பற்றி உண்மைக்கு புறம்பாக அண்ணாமலை பேசியிருக்க கூடாது. எங்களுக்கு கொள்கை தான் முக்கியம்.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். கொள்கைகளை காப்பாற்றுவது எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும். திமுகவினரும், சில பாஜகவினரும் எங்களுக்குள் சிண்டு முடிந்து விடுகின்றனர். அண்ணா பற்றி அண்ணாமலை பேசியதற்கு சி‌.வி.சண்முகம் எதிர்வினை ஆற்றினார். எடப்பாடி பழனிசாமி சொல்வதை நாங்கள் செய்வோம். ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமையும். எடப்பாடி பழனிசாமி கருத்தே எங்களது ஒட்டுமொத்த கருத்து என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...