தமிழக பிரச்சனைகளை டெல்லி தலைவர்கள் தீர்க்க வேண்டும் - கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக-பாஜக இரண்டு தலைவர்களிடையே ஏற்படும் வார்த்தை போரை விட்டுவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வேலையை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



கோவை: தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிக்கையாளர் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், 2019 ஆண்டு தமிழகத்தில் அதிமுக தலைமைகளில் வலுவான கூட்டணி உருவானது.

அதே போல தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்படுத்தும் வகையில் 25 ஆண்டு நிறைவு சாதனை விழா டெல்லியில் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழலை எதிர்த்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது இரண்டு நாட்களாக கூட்டணிக்குள் இருக்கின்ற இரண்டு(பாஜக - அதிமுக)நண்பர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இதெல்லாம் விட்டுவிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

தமிழக பட்ஜெட்டில் நிறைவேற்றப்படக்கூடிய பல திட்டங்கள் சரியான நிறைவேற்றப்படாமல் கிராமங்களில் சாலைகளை போடவில்லை. ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சீரடைந்து சந்தி சிரிக்கும் விதமாக இருக்கிறது. மக்கள் விரோத திமுக கட்சியை அகற்ற தேசியத் ஜனநாயகக் கூட்டணி கட்சி நடைபெறும் ஒருமித்து செயல்படுகின்ற நேரம் இதுவாகும்.

மீண்டும் பிரதமர் மோடியை 3வது முறையாக பிரதமராக ஆக்க அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும் அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுப்பேன். பரந்த மனப்பான்மையுடன் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...