முஸ்லீம் சமூகம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு - கோவையில் இஸ்லாமிய இயக்கங்கள் புகார்

கோவையில் கடந்த 16-ந் தேதி 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி சிறுபான்மை சமுகத்தின் மீது அவதூறு கற்பிக்கும் வகையில் அரபிபயிலும் வகுப்பில் தீவிரவாத பயிற்சி நடைபெறுவதாக ஆதார மற்ற குற்றச்சாட்டை வெளியிட்டனர் என்று கோவை மாவட்ட அனைத்து ஜமா அத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.



கோவை: மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் தேசிய புலனாய்வு முகமை சிறுபான்மை சமூகத்தை குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து பல்வேறு அடக்குமுறைகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது என கோவை மாவட்ட அனைத்து ஜமா அத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்ட அனைத்து ஜமா அத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.



அப்போது பேசிய அவர்கள், கோவையில் கடந்த 16-ந் தேதி 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி சிறுபான்மை சமுகத்தின் மீது அவதூறு கற்பிக்கும் வகையில் அரபிபயிலும் வகுப்பில் தீவிரவாத பயிற்சி நடைபெறுவதாக ஆதார மற்ற குற்றச்சாட்டை வெளியிட்டனர்.

இந்த செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் தேசிய புலனாய்வு முகமை சிறுபான்மை சமூகத்தை குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து பல்வேறு அடக்குமுறைகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

கோவையில் உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வையொட்டி சோதனை என்ற பெயரில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை குறிவைத்து என்.ஐ.ஏ அமைப்பானது சோதனைகள் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 26-ந் தேதி கோவையில் 22 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். முபீன் படித்த பாடசாலையில் படித்தார்கள் என்று அவருடன் படித்த மாணவர்களை குற்றவாளிகள் போல பாவித்து அனைவரது வீடுகளில் அத்துமீறி சோதனைகள் செய்வதும், அவர்களின் வீடுகளில் உள்ளவர்களை அதிகாலை 5 மணிக்கு வந்து நெருக்கடிகள் கொடுப்பதும், விசாரணை என்ற பெயரில் அழைக்கழிக்கப்படுவதும் என பெரும் மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

கோவை கார் வெடிப்பு நிகழ்விற்கு பின்புலமாக இருப்பது யார் என்பதில் ஒரு பெரும் சந்தேகத்திற்குரியதாக உள்ளநிலையில், தன் தவறை மறைக்கவும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மதப்பதட்டத்தை ஏற்படுத்தியும் குளிர்காய நினைக்கும் அரசியல் தரகர்களின் சூழ்ச்சியாகவே இந்த சோதனையும் உள்ளது என கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு சந்தேகம் எழுப்புகிறது.

கார் வெடிப்பு நிகழ்வில் இறந்த ஜமேஷா முபீனுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே என்.ஐ.ஏ. வின் கண்காணிப்பில் இருப்பவர்கள். அப்படியிருந்தும், இத்தகைய நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது எனில் என்.ஐ.ஏ. சரியாக கண்காணிக்க வில்லையா? அல்லது அவர்கள் உறுதுணையுடன் இது நடந்ததா? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்தை வலுவாகவும், வீரியமாகவும் முன்னெடுப்பதில் மதரஸாக்கள் பெரும் பங்காற்றின என்பது வரலாறு. ஆனால் இன்று அத்தகைய வரலாற்றில் களங்கம் ஏற்படுத்தவும், இஸ்லாமிய அடையாளங்களை கொச்சைப்படுத்தவும், இஸ்லாமியர்களை பொது மக்கள் மத்தியில் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் நோக்கில் மதரசாவில் தீவிரவாத பயிற்சி என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு இத்தகைய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மேலும் வேறொரு வழக்கில் அசாருதீன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ள நிலையில் இந்த கார் சிலிண்டர் வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருக்கிறது என என்.ஐ.ஏ. கூறுவது நம்பத் தகுந்ததாக இல்லை. ஜெயிலில் உள்ளவர் எப்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே இது போன்ற அசம்பாவிதங்கள் என்.ஐ.ஏ.வின் தூண்டுதலாலேயே நடைபெறுகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களுக்குரிய வகையில் என்.ஐ.ஏ.செயல்படுவதும், முஸ்லிம்களை குறிவைத்தே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு என்.ஐ.ஏ. வின் மீதான நம்பகத் தன்மையற்ற நிலையை ஏற்படுத்துகிறது.

எனவே தமிழக அரசு தமிழகத்திற்குள் என்.ஐ.ஏ. விசாரணைக்காக வந்தால் தமிழக அரசின் அனுமதி பெறாமல் அவர்கள் வரக்கூடாது என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றி அரசாணையாக வெளியிட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...