கோவை அருகே பட்டா நிலங்களில் வன விலங்குகளின் தாக்குதலைதடுக்க தவறிய வனத்துறையைகண்டித்து, மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி அடிவார பகுதிகளில் வன விலங்குகள் மற்றும் மனிதமோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கடும் வறட்சிகாரணமாக காட்டு யானைகள் பட்டா நிலங்களுக்குள் புகுவது கடந்த சில நாட்களாகஅதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் விவசாயிகள் படுகாயமடையும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே கோவை வரப்பாளையம், தடாகம் உள்ளிட்டபகுதிகளில் கடந்த சில நாட்களாக 6 வயதுடைய குட்டி பெண் யானைஒன்று வாயில் காயங்களுடன் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குள் அட்டகாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களுக்காக வீட்டிற்குள்நுழைவதும், அங்குள்ள முதியவர்களை தாக்குவதும் தொடர்கதையாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அந்த யானையைபிடித்து வேறு பகுதிக்கு அப்புறப்படுத்த வேண்டும் அல்லதுஅதனை முகாமில் கொண்டுசேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். நேற்று மாங்கரைவனப்பகுதியில் 4 வயது ஆண் குட்டி யானை பிடிக்கப்பட்டு சாடிவயல் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில்,வனத்துறையினர் சேட்டை செய்யும் யானையை பிடிக்க உரியநடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து யானையை பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தகவலை தரும் வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை எனவும் அவர்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது, காட்டு யானையை பிடிக்க தலைமை வனப்பாதுகாவலர் அளித்துள்ள அனுமதி கடிதத்தை வனத்துறையினர் அளித்ததால் விவசாயிகள் முற்றுகையைகைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை காரணமாகஅப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.