சனாதனம் குறித்து பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக சந்தித்தாக வேண்டும் - கோவையில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு நடிகை வருவதை தவறு என சொல்வது சரியா என்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.



கோவை: நாடு வேகமாக முன்னேறுவதற்கு மகளிர் இட ஒதுக்கீடு முதல் படி. இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,



பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படி. இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை.

உயர்கல்வி மருந்துவப்படிப்பில் சற்று ஏறக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளது. அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. ஜீரோ பர்சண்டேஜ் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனை வைத்து நீட் தேவையில்லை என்பது தவறு. மருத்துவக்கல்லூரிகள், மருத்துவ படிப்புகள் அதிகமாகி‌ இருப்பதால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. மருத்துவ உயர் கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர் கிடைக்கவில்லை.

மேலும் இதில் ஜீரோ ஜீரோ என சொல்லக்கூடாது. மருத்துவ உயர்கல்வியை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கவுன்சிலிங் செல்லும் போது தகுதியான மருத்துவர்களுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் பலனடையும் என்பது சரியல்ல. அரசுக் கல்லூரிகளும் பலனடையும்.

தனியார் கல்லூரிகளும் பலனடையும். இதனை வைத்து அநாவசியமாக அரசியல் செய்யக்கூடாது.சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் ஏன்‌ மத, சாதி வேறுபாடுகளை பேசுகிறார்கள்?. நலம் பயின்ற பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது ஏன்?.

இதற்கு முன்பு எப்போது இப்படி நடந்தது?. இந்துக்கள் படிக்க மற்றவர்கள் காரணம் என சபாநாயகர் சொல்வது நியாயமா என நீங்கள் சொல்லுங்கள். இப்படி பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

சனாதனம் குறித்து பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். அநாவசியமான சத்தம் போடாமல் போட்டால் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. பேசியது தவறு தான், இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்தும் போது, குடியரசு தலைவர் அழைக்கப்படுவார்.

உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு நடிகை வருவதை தவறு என சொல்வது சரியா?. தான் இவரது பொது நோக்கு?. இன்று குடியரசு தலைவருக்கு ஆதரவு தெரிவித்து பேசுபவர்கள், குடியரசு தலைவராக ஏன் போட்டியிட்ட போது ஏன் ஆதரிக்கவில்லை?.

பெண்கள், பழங்குடியினர், கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னுக்கு வர அங்கீகாரம் தர வேண்டும். நீங்கள் ஓட்டு போட்டு ஜனாதிபதி வெற்றி பெறவில்லை. ஜனாதிபதியாவதற்கு பிரதமர் தான் காரணம் என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...