கோவை மாவட்டம், கோவைப்புதூரில் செயல்பட்ட வரும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்லூரி விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி முனைவர் இளசை. சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் உயர்ந்த எண்ணங்களும், நற்சிந்தனைகளும் உடையவர்களாக விளங்க வேண்டும். சமூக அக்கறை உடையவர்களாக தொண்டாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் எல்லோரையும் பாராட்ட வேண்டும். இன்று சமுதாயத்தில் பிறரை பாராட்டாமல் குறை கூறியே வருகின்றனர். பிறரின் குறையினை குற்றமாக கருதாமல் அவற்றினை அவர்கள் புரியும்படி திருத்த வேண்டும்.

பிறரை பாராட்டி பழக கற்றுக் கொள்ளுங்கள். நாம் செய்யும் செயல்களில் புதுமையினைப் புகுத்த வேண்டும். காலத்திற்கேற்றாற் போல் நாம் நமது செயல்களைச் செய்ய வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும். பிறரிடம் கையேந்தாமல் சொந்தமாக சம்பாதித்து தனது நிலையினை உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.
இவ்விழாவில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பி.பிரியா வரவேற்புரை வழங்கினார். முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கி.சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து வகுப்புகளில் படிப்பில் முதலிடத்தினைப் பெற்ற மாணவர்கள், பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இதில் பல போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்று வணிகவியல் துறை ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை கணிதத்துறை வென்றது. முதல்வர் முனைவர் வி.இராதிகா கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். நிரைவாக கணினி அறிவியல் துறைத்தலைவர் சீமாதேவ் அக்ஷதா நன்றியுரை வழங்கினார்.