வால்பாறையில் மாலை தொடங்கி இரவு வரை கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் இரவு நேரத்திலும் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.



கோவை: விநாயகர் சதூர்த்தி திருவிழாவையொட்டி இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.



அவ்வாறு பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, சிலைகள் எஸ்டேட் பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.



அப்போது வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு வால்பாறை பிரதான சாலை வழியாக ஆடல், பாடல், நடனமாடி சிலைலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.



இரவு 9 மணி அளவில் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள, ஆற்றில் கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...