கே.எம்.சி.எச் மருத்துவமனையில் முளைச்சாவடைந்த ஹோட்டல் உரிமையாளர் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா கோவிந்த நாய்க்கன்பாளையத்தை சேர்ந்த திரு.தாமோதரன் (வயது 40 ) இவர் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் நடத்திவருகிறார். இவர் கடந்த 13-ஆம் தேதி அதிகாலையில் 12.15 மணிக்கு ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திரு.தாமோதரன் அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஈரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. .பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.   

இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு எற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா கோவிந்த நாய்க்கன்பாளையம் குளுர் கிராமத்தை சேர்ந்த திரு.செந்தில்குமார் அவர்கள்  திரு.தாமோதரன்  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது இதயம், கண்கள், கல்லீரல், தோல்ம ற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும்,, கண்கள் அரவிந்த்ம ருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்  வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்ல G பழனிசாமி  கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய திரு.தாமோதரன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...