இழப்பீடு தொகை கோரி தரையில் உருண்டு புரண்ட விவசாயிகள் - தாராபுரத்தில் பரபரப்பு

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிக்காக நிலத்தை வழங்கிய விவாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750-ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997-ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000-ஆம் ஆண்டு அணைக்கான கட்டுமான பணிகளை தொடங்கப்பட்டது.

விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகளிடம் கூறியவாறு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்பதால் இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. 2017-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 24-ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் இறந்துவிட்டனர்.



இருப்பினும் தற்போது உள்ள 150-விவசாயிகள் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் கடந்த 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று 45-ஆவது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகள் தரையில் உருண்டு பிரலும் போராட்டம் ஈடுபட்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...