கோவையில் தங்க நகை செய்வோருக்கான பயிற்சி மையம் - சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உறுதி

பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கோவை தெற்கு தொகுதியில் மட்ட்டும் 35 ஆயிரம் பேர் பலனடைவார்கள் என அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: தங்க நகை செய்வோருக்கான பயிற்சி மையம் கோவையில் தொடங்கப்படும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயனாளிகளை பதிவு செய்யும் நிகழ்ச்சி கோவை செட்டிவீதியில் உள்ள விஸ்வகர்மா அமைப்பினர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு விஸ்வகர்மா திட்டத்தின் பயன்களை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து இத்திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றியவர், இத்திட்டத்தின் கீழ் கோவை தெற்கு தொகுதியில் அதிக அளவில் உள்ள விஸ்வகர்மா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவை தெற்கு தொகுதியில் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா என்கிற திட்டத்தில் விஸ்வகர்மா தொழில் செய்யக்கூடிய மக்களை இலவசமாக அந்த திட்டத்தில் பதிவு செய்து கொடுப்பதற்கான துவக்க நிகழ்ச்சியில கலந்து கொண்டுள்ளேன். இந்த தொகுதி முழுவதும் எந்தெந்த பகுதிகளில் விஸ்வகர்மா சமுதாய பணியாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் முகாம்கள் நடத்தி அவர்களுக்கு இலவசமாக பதிவு செய்து கொடுக்கின்ற பணிகளை வரக்கூடிய நாட்களில் தொடர்ச்சியாக செய்யவிருக்கிறோம்.

இந்த திட்டத்தின் வாயிலாக தெற்கு தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு மேலாக பலன் அடைவார்கள். உடுப்பியில் மத்திய அரசின் சார்பில் தங்க நகை செய்பவர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது.

அதை போலவே கோவை தெற்கு தொகுதியில் மத்திய அரசின் சார்பாக பயிற்சி மையத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என வேண்டுதல் வைத்திருக்கிறேன். அந்த பயிற்சி மையத்தை அமைக்க மீண்டும் கோரிக்கை வைத்து, இந்த தொகுதியில் கொண்டு வருவதற்காக முயற்சி செய்யப் போகிறேன்.

இந்த திட்டம் முழுமையாக சிறு தொழில்கள் இருக்கக்கூடிய அத்தனை மக்களையும் அரவணைக்கின்ற திட்டமாக உள்ளது. ஏனென்றால் இந்த தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து எந்த அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. பாரம்பரியம் சார்ந்த தொழில்கள் நசிந்து போகாமல் ஊக்கம் அளித்தால் நமது நாட்டினுடைய பொருளாதாரம் வளரும், அவர்களுடைய வாழ்க்கை தரம் உயரும் என்ற காரணத்தினால் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அரசியலுக்காக இதை குலக்கல்வி என விமர்சிப்பதை நாங்கள் புறக்கணிக்கிறோம். அது தவறான பார்வையாகும்.

யார் இந்த தொழில் செய்தாலும் இந்த திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.

நாளை டெல்லி செல்வது உண்மைதான். ஆனால், மத்திய தேர்தல் கமிட்டி குழு கூட்டத்திற்காக செல்கிறேன். இதற்காக என்னை அழைத்துள்ளார்கள். மாநிலத் தலைவர் டெல்லி செல்வது குறித்து எனக்கு தெரியவில்லை.' எனக் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...