திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வேனில் குட்கா கடத்தி நபரை கைது செய்து 48 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்: தாராபுரத்தில் ஆம்னி வேனில் கடத்தி வந்த குட்கா பொருள்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் தாராபுரம் சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான 5-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது ஆம்னி வேன் ஒன்று தாராபுரம் நோக்கி மிக வேகமாக வந்தது.
அதனை கண்ட போலீசார் தடுத்து நிறுத்தி வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் பண்டல், பண்டலாக கட்டுகள் இருந்து தெரியவந்தது.
வாகன ஓட்டுனரிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிய டிரைவர் மீது சந்தேகம் ஏற்பட்டு வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது தாராபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விற்பனைக்காக குட்கா பொருடகளை கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியைச் சேர்ந்த அண்ணாசாமி மகன் செல்லப்பாண்டி (24) என தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிந்து 48-கிலோ குட்கா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த பின்னர் செல்லப்பாண்டியை போலீசார் உடுமலைப்பேட்டை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.